
அருமைத்தோழர்களே! தமிழ் மாநில சங்கம் சார்பாக ராஜ்கோட் மத்திய செயற்குழுவில் எடுத்தமுடிவின்படி திறந்த வெளி கருத்தரங்கம் மாநில தலைவர் தோழர் K.மாரிமுத்துதலைமையில் கோவை மத்தியதொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் கோவை மாவட்டசெயலர் தோழர் ராஜேந்திரன் வரவேற்று உரை ஆற்றினார். மத்திய தொழிற்சங்கங்களின் 10 அம்சகோரிக்கைகளும், அதற்கான போராட்டங்களும் என்ற தலைப்பில் உரையாற்றியநமது மாநில செயலர் தோழர்S செல்லப்பா அவர்கள் தன் உரையில்பொதுத்துறை உருவான வரலாற்றையும்,பொதுத்துறை நிறுவனங்கள்தன் லாபத்தில் அரசுக்கு அளித்த மிக பெரிய பங்களிப்பையும் சுட்டி காட்டினார். உலகமயமாக்கல்,தனியர்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தும் தற்போது உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசும் அதற்கு முந்திய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி அரசும் பொது துறையை சீரழிக்கும் கொள்கையை கடைபிடிப்பதையும் அதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் 1991முதல் இதுவரை நடத்திய 16 வேலை நிறுத்த போராட்டங்களிலும் நமது BSNLEU சங்கம் பங்கேற்றதின்விளைவாகத்தான் இன்று வரை 1% பங்குகள்கூட விற்கப்படாமல் நமது BSNL நிறுவனம் காக்கக்பட்டுஉள்ளதை நினைவூட்டினார். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியமாக ரூபாய் 10,000/-வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் 10 அம்ச கோரிக்கையில் உள்ளதை சுட்டி காட்டினார்.
மத நல்லிணக்கமும் தொழிலாளி வர்க்க கடமையும்என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய தீண்டாமைஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் தோழர் Pசம்பத் தன் உரையில் இந்தியாவின் பிரிவினைக்குகாரணமான மதவாத சக்திகளின் போக்கைவரலாற்று சான்றுகளுடன் சுட்டி காட்டினார். தேசதந்தை மகாத்மாவின் படுகொலைக்கு காரணமானமதவாத சக்திகள் மீண்டு எழுவது தேசநலனுக்கு மிக ஆபத்து என்பதையும், இந்தியாவில்மதவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக போராடக் கூடிய ஒரே அமைப்பு இடதுசாரிகள் மட்டுமே என்பதைஅவர் ஆணித்தரமாக கூறினார். பாபரி மசூதி தாக்கபட்ட நேரத்தில் இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்களில்மட்டுமே சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் நடைபெற வில்லை என்பதை அவர் கூறினார்.

