Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 8, 2014

தோழர் V.A.N. நம்பூதிரி - நேரடி நியமன TTA தோழர்கள் சந்திப்பு


பஞ்சாப் மாநிலம் லுதியானா நகரில் 06.03.2014 அன்று அந்த மாநில சங்கத்தால் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. அதாவது 01.01.2007 க்கு பிறகு பணியில் சேர்ந்த TTA தோழர்களை மட்டும் பிரத்யேகமாக அழைத்து கூட்டம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. கூட்டத்தில் நமது அகில இந்திய தலைவர் தோழர் V.A.N. நம்பூதிரி கலந்து கொண்டு, நேரடி TTA தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்தார். மாநிலம் முழுவதிலிருந்தும் சுமார் 200 தோழர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் பிரச்சனைகளான சம்பள இழப்பு, பதவிகள் பெயர் மாற்றம், பதவி உயர்வு தேர்வு விதி தளர்த்தல் உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் தலைவர் விளக்கமாக பதிலளித்தார். BSNLEU சங்கம் எடுத்த நடவடிக்கைகள், நடத்திய போராட்டங்கள் போன்றவற்றை விளக்கினார். அனைவரும் இணைந்து போராடினால் மட்டும் தான் பிரச்சனைகளை தீர்க முடியும் என உறுதி பட கூறினார். தலைவரின் விளக்கங்களை கேட்ட தோழர்கள் BSNLEU நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் முழுமையாக பங்கேற்க சபதம் ஏற்றனர். மையமான பிரச்சனை என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து  நல்ல ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த  பஞ்சாப் மாநில சங்கத்தை சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. முழுமையான விவரங்களை காண கீழே சொடுக்கவும் 
Click here to see