Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, March 1, 2014

பெட்ரோல், டீசல் விலை உயர்வு


பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசாவும்டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும்அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூர் விற்பனை வரிமதிப்புக் கூட்டு (வாட்வரிகளுடன் சேர்த்துசென்னையில் பெட்ரோல் விலை 77 பைசாவும்டீசல் விலை 61 பைசாவும் அதிரிக்கிறது.

உள்ளூர் விற்பனை வரிகளுக்கேற்ப பிற நகரங்களிலும் சிறிய மாறுபாடுகளுடன் இந்தவிலையேற்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடைசி முறையாக கடந்த ஜனவரி 4-ஆம் தேதிதான் பெட்ரோல் விலை 91 பைசா அதிகரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்துபெட்ரோலிய நிறுவனங்களின் மானிய இழப்புகளை சரிக்கட்டுவதற்காக மாதந்தோறும் டீசல்விலையில் 50 பைசா அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவின்படிகடந்த ஜனவரி 31-ஆம் தேதி டீசலின் விலையில் 50 பைசாஉயர்த்தப்பட்டதுஆனால் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

எனினும்சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதன் காரணமாக தற்போது பெட்ரோல் விலையும்உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.