Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, March 1, 2014

இந்தியன் ஆயில் பங்கு விற்பனையில் இறுதி முடிவு: ரூ. 5,300 கோடி திரட்ட வாய்ப்பு


இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (..சி.) 10 சதவீத அளவுப் பங்குகளை பொதுத் துறை நிறுவனங்களுக்கு சலுகைவிலையில் விற்பது தொடர்பாக மத்திய அமைச்சர் குழு கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டதுஇதன் மூலம் ரூ. 5,300கோடி திரட்ட இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

..சி.யின் 10 சதவீத அளவுப் பங்குகளை விற்பது குறித்து அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர் குழுவின் சிறப்பு கூட்டம் புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றதுமத்திய நிதி அமைச்சர் .சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்எண்ணெய்-இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்இக்கூட்டத்தில் பங்குவிற்பனை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத அளவுப் பங்குகளை (சுமார் 24.27 கோடி பங்குகள்), பொதுத் துறையைச் சேர்ந்த.என்.ஜி.சிமற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கத் தீர்மானிக்கப்பட்டதுஇரு நிறுவனங்களும் தலா 5சதவீத பங்குகளைப் பெறும்..சி.யின் பங்கு விலையில் 10 சதவீத அளவு தள்ளுபடி விலையில் பங்குகளை அளிப்பதுபற்றிய முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதுமும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காலையில் ..சி.பங்கின் விலை ரூ. 249 என்ற நிலையில் இருந்ததுஇதையடுத்துநிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ. 60,456 கோடியாகஉள்ளது.

சந்தை விலையை விட ஒரு சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ பங்கு விலையை நிர்ணயிக்கலாம் என்று ஜனவரிமாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதுஆனால்.என்.ஜி.சிமற்றும் ஆயில் இந்தியா இதற்கு சம்மதம்தெரிவிக்கவில்லைகடந்த ஆறு மாதங்களில் ..சிபங்கின் சராசரி விலையை மதிப்பிட்டுபங்குகளை வாங்குவதாகஅந்நிறுவனங்கள் தெரிவித்திருந்தனஇதையடுத்துசந்தையில் நிலவும் பங்கு விலையில் 10 சதவீத தள்ளுபடி அளிக்கஅதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர் குழு தீர்மானித்ததுஇந்த விற்பனை மூலம் ரூ. 5,300 கோடி திரட்ட இயலும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: தினமணி