Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 6, 2020

வெற்றியின் படியில்!



சென்னை உயர் நீதி மன்றத்தில் நாம் தொடுத்துள்ள வழக்கு மூலம் இரண்டாவது கட்டமாக சம்பளம்  அடுத்தவாரம் கிடைக்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 05.11.2020 அன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையில் நமது வழக்கறிஞர், BSNL வழக்கறிஞர், ஒப்பந்தகாரர்களின் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர் துறை வழக்கறிஞர் உட்பட அனைத்து வழக்கறிஞர்களூம் கலந்து கொண்டனர். நீண்ட விசாரணைக்குப் பின்னர் நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 

அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய சராம்சங்கள் :

1) ஒப்பந்தகாரர்களின்    மொத்த பில் தொகை சுமார் 60 கோடி ரூபாய். (இன்னும் இறுதிப்படுத்தப்பட் வில்லை) அதில் 25 % ஆன ரூபாய் 15 கோடி ரூபாயை தொழிலாளர் துறை அதிகாரிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டது.

2) தங்கள் மூலமாக சம்பள பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தகார்ர்கள்  கோரிக்கை தற்போதைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

3) 26 இடங்களில் பணி செய்து, தொழிலாளர் துறை அதிகாரிகள் 3528 ஒப்பந்த தொழிலாளர்களின் விவரம் பெற்றுள்ளார்கள். (BSNL மற்றும் BSNLEU - TNTCWU  சங்கத்தின் மூலமாக இந்த தொழிலாளர் பட்டியல் கிடைத்துள்ளது. நமக்கு பிறகு இந்த வழக்கில் சேர்ந்து கொண்ட மற்றொரு சங்கம் தொழிலாளர் பட்டியல் இதுவரை அளிக்கவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் அளிப்போம் என்று கூறியுள்ளார்கள்).

4) தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் உள்ள 15 கோடி ரூபாயை 3528 தொழிலாளர்களுக்கும் சம்மாக பிரித்துக் கொடுக்கலாம்..

5) சராசரியாக ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளிக்கும் ரூபாய் 42517 வருகின்றது. எனவே ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூபாய் 40000 அல்லது அவருடைய உண்மையான சம்பள நிலுவை குறைவாக இருந்தால் அந்த தொகையை அளிக்க வேண்டும். இது தற்காலிக ஏற்பாடே.

6) BSNL- யை பொறுத்தமட்டில் அது முதன்மை பணியாளர் (PRINCIPAL EMPLOYER) ஆகும். எனவே. Contract Labour Regularisation and Abolision Act 1970 படி,  BSNL  நிர்வாகம் கீழ்க்கண்ட விவரங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்..

a. ஒப்பந்த தொழிலாளியின் பெயர்.

b. அடையாள விவரங்கள்.

c. ஒப்பந்தகார்ரின் பெயர்.

d. வேலை செய்த விவரம்.

e. உரிய சம்பளத் தொகை.

f. வங்கி கணக்கு விவரம்.

7) BSNL நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர் பிரச்னைகளில் வல்லுனர்களாக இருக்கின்ற அதிகாரிகளில் குறைந்த பட்சம் மூன்று பேர் கொண்ட குழுவை 06.11. 2020 அன்று அமைத்து, அந்த விவரத்தை தொழிலாலர் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்..

8) மேலும் மேலே குறிப்பிடப்பட்ட 3528 ஒப்பந்த தொழிலாளர்களின் அனைத்து விவரங்களையும் தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

9) தொழிற்சங்கங்களும் இரண்டு பேர் கொண்ட குழுவை 07.11.2020-க்குள் அமைத்து  அந்த விவரத்தை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

10) 3528 ஒப்பந்த தொழிலாளர்களின் அனைத்து விவரங்களிலும் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு உதவி புரியலாம்.

11) ஒப்பந்தகாரர்கள் தங்களிடம் உள்ள விவரங்களை அளிக்க வில்லை என்றாலும் BSNL மற்றும் சங்கத்தின் மூலம்   3528 தொழிலாளர்கள் பட்டியலை நவம்பர் 7,9 ஆகிய நாட்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் இறுதிப்படுத்த வேண்டும்.

12) 3528 தொழிலாளர்களில் எந்தெந்த ஒப்பந்த தொழிலாளர்களின் விவரம்  இல்லையோ அல்லது கிடைக்க வில்லையோ அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குதல் பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்..

13) 3528 தொழிலாளர்கள் போக மீதி உள்ள ஒப்பந்த தொழிலாளிகளின் விவரத்தை  தொழிற்சங்கமோ, BSNL  நிறுவ்னமோ, ஒப்பந்தகார்ர்கள் அளித்தால் அவைகளை தொழிலாள்ர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அடுத்த விசாரணையின் போது சம்பளம் வழங்குதல் சம்பந்தமாக உத்தரவு போடப்படும்..

14) தீபாவளியை கொண்டாடுவத்ற்காக  ஒவ்வொரு தொழிலாளியின் வங்கி கணக்கிலும் ரூபாய் 40000 நவம்பர் 10, 11மற்றும் 12 ஆகிய தினங்களில்  செலுத்தப்படும்.

15) 15 கோடி ரூபாயில் மீதம் ஏதாவது தொகை இருந்தால் தொழிலாளர் துறை அதிகாரியின்  வங்கி கணக்கிலே வைத்திருக்க வேண்டும். இது சம்பந்தமான ஓர் அறிக்கையை நீதி மன்றத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.

16) அடுத்த விசாரணை 25. 11.2020 அன்று காணொளி மூலமாகவே நடைபெறும்.

தோழர்களே! 

நாம் நடத்திய சட்டப் போராட்டம்  வெற்றியுடன் முடியும் தறுவாயில் காத்திருக்கின்றது. ஒவ்வொரு தோழரும் அதிகபட்சமாக 40000 ரூபாய் அல்லது அவ்ருடைய உண்மையான சம்பள நிலுவை தொகையை அடுத்த வாரம் அதாவது தீபாவளிக்கு முன்னர் பெற இருக்கின்றார்கள். நீதி மன்ற போராட்டத்தில் திறம்பட வாதிட்ட நமது வழக்கறிஞரும் இடது சாரி சிந்தனையாளருமான  தோழர் N.J.R பிரசாத் அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நமது போராட்டங்கள் என்றும் தோற்றதில்லை.

தோழமையுடன்,

E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU

M. செல்வம்,  மாவட்ட செயலர், TNTCWU

தகவல்: தமிழ் மாநில BSNLEU - TNTCWU சங்கம்