Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 6, 2020

சென்னை முற்றுகை போராட்டம் வெற்றி


ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய நிலுவை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கண்டித்து 5.11.2020 அன்று சென்னை BSNL CGM  அலுவலகத்தில் பெருந்திரள் முற்றுகை போராட்டம் நடத்த BSNLEU - TNTCWU இரண்டு மாநில சங்கங்களும் அறைகூவல் கொடுத்திருந்தது. 

5.11.20, அதிகாலை முதல் சென்னை CGM அலுவலகத்தை நோக்கி தோழர்கள் அலைகடலென திரள துவங்கினர். நமது சேலம் மாவட்டம் சார்பாக, 64 தோழர்கள், தனி பேருந்தில் காலை 8 மணிக்கு CGM அலுவலகம் சென்றடைந்தோம். மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 600 தோழர்கள் காலை 10 மணி அளவில் திரன்டனர். 

தலைவர்கள் எழச்சியுறை, தோழர்களின் வின்னதிரும் கோஷங்களை கண்டு அஞ்சிய மாநில நிர்வாகம் காவல் துறையை வரவழைத்தது.

மதியம் 2.30 மணி அளவில் பேச்சு வார்த்தைக்கு சென்றோம். நமது தரப்பில் BSNLEU மாநில தலைவர், மாநில செயலர், மாநில பொருளர், சேலம், கடலூர், நெல்லை, மதுரை மாவட்ட செயலர்கள் ஆகியோரும், நிர்வாக தரப்பில் CGM, GM(HR), DGM(A), AGM(SR)  ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். 

சுமார் 3 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் கீழ்கண்ட உடன்பாடு ஏற்ப்பட்டது.

1. உடனடியாக 15 கோடி ரூபாய் RLC - CGM இணைந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். (இதன் மூலம் தீபாவளிக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் பட்டுவாடா செய்யப்படும்)

2. 10.12.2020 க்குள் மீதமுள்ள  45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

3. சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

4. ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்று அபாயம் இருந்தபோதும், பட்டினி கொடுமை அதை விட கொடியது என உணர்த்தும் வண்ணம் பெருந்திரளாக தோழர்கள் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. 

நமது மாவட்டத்திலும் தோழர்களின் பங்கேற்பு போற்றுதலுக்குரியது. கிளை சங்கங்களுக்கு மாவட்ட சங்கங்களின் பாராட்டுக்கள். விரிவான மாவட்ட மாநில சங்க சுற்றறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. 

வாழ்த்துக்களுடன்,

E. கோபால், மாவட்ட செயலர் BSNLEU

M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU

அறிக்கை காண இங்கே சொடுக்கவும்