Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, October 4, 2020

தோழர் M. விஜயன் பணி நிறைவு பாராட்டு விழா

 





ஆரம்ப காலம் முதல் KG போஸ் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டு அனைத்து இயக்கங்களிலும் பங்குபெற்று, பல பொறுப்புக்களை வகித்த மூத்த தோழர் M. விஜயன், மாவட்ட உதவி தலைவர், 30.09.2020 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, 29.09.2020, செயற்குழுவின் இடையில், தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா மாவட்ட சங்கம் சார்பாக நடத்தப்பட்டது.

தோழர் S. ஹரிஹரன் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் E. கோபால்,  மாவட்ட செயலர்,  தோழர் S. தமிழ்மணி மாநில உதவி தலைவர் தோழருக்கு சால்வை, சந்தன மாலை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள். தோழரை வாழ்த்தி அவர்தம் இயக்க பணிகளை நினைவு கூர்ந்தனர்.

பின்னர் கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள்,  தோழர் விஜயனை கௌரவப்படுத்தியபின், தோழர் M. விஜயன் ஏற்புரை வழங்கினார்.

பணி நிறைவையொட்டி மதிய விருந்து வழங்கியதோடு,  BSNLEU மாவட்ட சங்கத்திற்கு, ரூ. 3000.00 நன்கொடை வழங்கினார் தோழர் M. விஜயன். அதே போல் வர்க்க உணர்வோடு TNTCWU சங்கத்திற்கும் ரூ. 1000.00 நன்கொடை வழங்கினார். தோழருக்கு நன்றி.  

தோழமையுடன்

E. கோபால்,

மாவட்ட செயலர்