Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 23, 2020

வருமான வரி கணக்கீட்டு முறை - புதிய திட்டம் - விருப்பம் தெரிவித்தல் பிரச்சனை

Old Vs New Tax Regime : Which Is Better? - Groww

2020 பட்ஜட்டில், மத்திய அரசாங்கம் தனி நபர் வருமான வரி கணக்கீட்டு முறையில், சில மாற்றங்களை அறிவித்தது. அதன்படி,  நிரந்தர கழிவுகள், விதிவிலக்குகள் எதுவுமில்லாமல் ஒரு புதிய கணக்கீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய திட்டம் தனக்கு பயனுள்ளதாக இருக்கும் என ஊழியர் கருதினால், புதிய திட்டத்திற்கு அவர் விருப்பம் கொடுக்கலாம். புதிய திட்டம் லாபம் தரவில்லை என்றால்,பழைய திட்டத்தில் தொடரலாம் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மத்திய அரசின் இந்த புதிய வரி விதிப்பு முறைக்கு விருப்பம் தெரிவிக்க, BSNL டில்லி தலைமையகம் 28.04.2020 கடைசி தேதி என 20.04.2020 அன்று ஒரு உத்தரவு வெளியிட்டது. இதை பார்த்த சேலம் மாவட்ட நிர்வாகம், 25.04.2020க்குள் ஊழியர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என 21.04.2020 அன்று உத்தரவிட்டனர்.  

ஊரடங்கு பிரச்சனை காரணமாக, அலுவலகத்திற்கு வருவதே கடினமாக உள்ள இந்த சூழலில், ஊழியர்கள் மூன்று தினங்களுக்குள் தங்கள் ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தையும் கணக்கிட்டு,  விருப்பம் கொடுப்பது என்பது சாத்தியமில்லா செயல். 

உடனடியாக, சேலம் மாவட்ட சங்கம், மத்திய, மாநில சங்கங்களுக்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றது. பிரச்சனையின் அவசரத்தை உணர்ந்த நமது மத்திய சங்கம், காப்பரேட் நிர்வாகத்திற்கு கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்து, விவாதித்தது. 

நமது தரப்பு நியாயத்தை ஏற்று, கார்ப்பரேட் நிர்வாகம், விருப்பம் தெரிவிப்பதற்கான தேதியை 31.05.2020 வரை நீட்டித்து உத்தரவு வெளியுட்டுள்ளது.

நமது கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில சங்கங்களுக்கு நமது தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
BSNLEU மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும் 



கார்ப்பரேட் அலுவலக கால நீட்டிப்பு உத்தரவு