Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, April 11, 2020

AIIEA, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வர்க குணாம்ச உதவி!



கடந்த 10 மாத காலமாக, ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் ஏதுமின்றி கடுமையான நெருக்கடியில் உள்ள நிலையில், உலகயே அச்சுறுத்தும் கோவிட்19 வைரஸ் வேறு எரிகிற நெருப்பில், எண்ணையை ஊற்றுவது போல் வந்துவிட்டது. 

தோழர்களின் கடினமான சூழலை உணர்ந்து, வர்க்க உணர்வோடு அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸு ஊழியர் சங்க, சேலம் கோட்டம் முடிவு எடுத்ததது. 

அதன்படி, அவர்கள் கோட்ட அளவில் நமது BSNLEU -TNTCWU சங்கங்களை தொடர்பு கொண்டு, ரூ. 1500.00 மதிப்பிலான மளிகை பொருட்களை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க முன்வந்தனர். சேலம் வருவாய் மாவட்டம் சார்பாக, சேலத்திலும், நாமக்கல் வருவாய் மாவட்டம் சார்பாக திருச்செங்கோட்டிலும் அதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் நிதி வசூல் நிலைமைக்கு ஏற்ப, சேலத்தில் 40 தோழர்களுக்கும், திருச்செங்கோட்டில் 25 தோழர்களுக்கும் வழங்க முன் வந்தார்கள்.  

அதற்கான, நிகழ்ச்சி, 09.04.2020, அன்று சேலம் AIIEA (ICEU) கோட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. AIIEA கோட்ட தலைவர் தோழர் நரசிம்மன், கோட்ட செயலர் தோழர் தர்மலிங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். சேலம் நகர பகுதியில் பணி புரியும் 40 தோழர்கள் (கேபிள் , INFRA, ஹவுஸ் கீப்பிங்) கலந்து கொண்டு, AIIEA சங்கம் வழங்கிய, ரூ. 1500.00 மதிப்புள்ள மளிகை சாமான்கள் பெற்று கொண்டனர். 

நிகழ்வில், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட உதவி தலைவர் தோழர் M . விஜயன், GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார், TNTCWU சேலம் மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், மாவட்ட செயலர் தோழர் M. செல்வம், மாவட்ட உதவி செயலர் தோழர் P . செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, 08.04.2020 அன்று திருச்செங்கோடு தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், திருச்செங்கோடு AIIEA (ICEU) கிளை செயலர் தோழர். M. V. ஆறுமுகம், கிளை தலைவர் தோழர் K. அர்த்தநாரிஸ்வரன், சேலம் கோட்ட ICEU துணை தலைவர் தோழர் M . கணேச பாண்டியன் ஆகியோர் 25 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார்கள். 

நமது அரங்கம் சார்பாக, தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S.தமிழ்மணி, BSNLEU கிளை செயலர்கள் தோழர்கள் C. ஆண்டியப்பன், V. பரந்தாமன், மூத்த தோழர் M. ராஜலிங்கம், கிளை தலைவர் தோழர் சரவணன், TNTCWU கிளை செயலர். K. வெங்கடேஸ்வரன், TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் லாரன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். 

வர்க்க குணாம்சத்தோடு உதவி நல்கிய AIIEA சேலம் கோட்ட சங்கத்திற்கு, இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாகவும், ஒப்பந்த ஊழியர் சார்பாகவும் செவ்வணக்கங்கள் மற்றும் தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,

E . கோபால்,
மாவட்ட செயலர்  

சேலம் AIIEA அலுவலகம் 






















திருச்செங்கோடு