Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 22, 2019

நாடு தழுவிய பெருந்திரள் உண்ணாவிரதம்

Image result for போராட்டம்

PGM அலுவலகம்,  சேலம்-7, 25.11.2019, திங்கட்கிழமை, காலை 10.30 மணி முதல்

கோரிக்கைகளில் உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வில்லையென்றால், 
VRS 2019 திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்த ஊழியர்களை வாபஸ் பெற்றுக் கொள்ள அறைகூவல் விட வேண்டியிருக்கும் என மத்திய சங்கம் இறுதி எச்சரிக்கை


20.11.2019 முதல் நடைபெற இருந்த மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம் விலக்கிக் கொண்டது தொடர்பான தனது அதிருப்தியை, BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. AUABயில் உள்ள சங்கங்களுக்கிடையே உண்ணாவிரதத்திற்கு செல்வதில் கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால், அந்த திட்டம் கைவிடப்பட்டது. எனினும், விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் ஊழியர்களின் மிக முக்கியமான பிரச்சனைகள் மீது தீர்வு காண்பதை உறுதி செய்யும் வகையில் போராட்ட இயக்கங்கள் தேவை என BSNL ஊழியர் சங்கம் உறுதியாக கருதுகிறது. 

கடந்த இரண்டு தினங்களாக, போராட்டம் நடத்துவதற்காக அனைத்து ஊழியர் சங்கங்களையும், BSNL ஊழியர் சங்கம் அணுகியது. அதன் விளைவாக, மாவட்ட, மாநில மற்றும் கார்ப்பரேட் அலுவல மட்டங்களில்,  25.11.2019 அன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்திட பல்வேறு சங்கங்கள் இசைவு தெரிவித்தது. எந்த ஒரு சங்கத்தையும், விட்டு விட்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்த BSNL ஊழியர் சங்கத்திற்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. 

விருப்ப ஓய்வு திட்டம் மற்றும் இதர முக்கிய பிரச்சனைகளில் உள்ள அநீதிகளை களைய, தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க விரும்பிய அனைத்து சங்கங்களும் 25.11.2019 அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்த ஒன்றாக இணைந்துள்ளன. 

அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில், 25.11.2019 உண்ணாவிரத போராட்டம் பெருந்திரள் போராட்டமாக நடைபெறும். மத்திய சங்க அறைகூவல்படி, நாம் இதை சக்திமிக்க தாக நடத்த வேண்டும். எனவே கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கூடுதல் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்