Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 23, 2019

பேச்சு வார்த்தை தோல்வி! திட்டமிட்டபடி போராட்டம் !!

failed க்கான பட முடிவு


உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் காரணமாக, நேற்று, 22.11.2019,  DIRECTOR (HR) மற்றும் BSNLEU, BTEU, FNTO, BSNL MS, ATM மற்றும் OA ஆகிய சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் / பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

முக்கியமான பிரச்சனைகளின் மீது எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.  குறிப்பாக, விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்பவர்களுக்கு பென்சன் COMMUTATION மற்றும் 3வது ஊதிய மாற்ற பலன்கள் தொடர்பாக நிர்வாகத்தால் எந்த ஒரு உறுதிமொழியையும் கொடுக்க முடியவில்லை.  அதே போல, அக்டோபர் மாத ஊதியம்,  ஊதியத்தில் பிடித்தம் செய்தவற்றை உரிய மட்டங்களில் செலுத்துவது மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் ஆகியவை தொடர்பாகவும் எந்த ஒரு உறுதிமொழியையும் நிர்வாகத்தால் கொடுக்க முடியவில்லை.  

எனவே, 25.11.2019ல் உண்ணாவிரத போராட்டம், திட்டமிட்டபடி நடத்திட வேண்டும்.  இந்த போராட்டம் மிகப்பெரும் வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

நமது மாவட்டத்தில், 25.11.2019 அன்று, சேலம் PGM அலுவலகத்தில், காலை 10.30 மணிக்கு போராட்டம் துவங்கும். கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கூடுதல் கவனம் எடுத்து ஊழியர்களை திரட்ட வேண்டும். ஒப்பந்த ஊழியர் சம்பள கோரிக்கை பிரதானமானது என்பதால், ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU 
M . செல்வம், 
மாவட்ட செயலர், TNTCWU