Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, February 9, 2019

AUAB சேலம் மாவட்ட கூட்டம் - 07.02.2019


AUAB கூட்டமைப்பின், சேலம் மாவட்ட கூட்டம், 07.02.2019, அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் R . மனோகரன், மாவட்ட செயலர், SNEA தலைமை தாங்கினார். AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முகசுந்தரம், BSNLEU மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.

01. AUAB மத்திய, மாநில அமைப்புகளின் அறைகூவல்படி, 11.02.2019 முதல் 15.02.2019 வரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், தெரு முனை பிரச்சார கூட்டங்கள் சக்திமிக்கதாக நடத்துவது.

02. 13.02.2019 அன்று மாநில தலைவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டத்தை சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் நடத்துவது.

03. மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தை சேலம் மாவட்டத்தில் வெற்றிகரமாக்க கடுமையாக கள பணியாற்றுவது. போராட்டத்தை 100 சதம் வெற்றிகரமாக்குவது. 

04. மாவட்ட கூட்டமைப்பு சார்பாக, நோட்டீஸ் வெளியிடுவது. 

05. மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை சந்திப்பது. 

06. அடுத்த கூட்டம், 15.02.2019 அன்று நடத்துவது.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB