Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, 23 January 2019

ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்த தொகையை உடனே சம்மந்தப்பட்ட நிறுவங்களுக்கு செலுத்து! BSNLEU கோரிக்கை !!



கடந்த சில மாதங்களாக, ஊழியர்களின் ஊதியத்தில் GPF, வங்கி கடன்கள், சொசைட்டி பணம், HBA, EPF, LIC, வருமான வரி, PLI உள்ளிட்டவைகளுக்காக பிடிக்கப்பட்ட தொகைகளை, அதற்கு தொடர்பான நிறுவனங்களுக்கு அனுப்பப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள், அபராத வட்டி கட்ட வற்புறுத்தப்படுகிறார்கள். 

இது தொடர்பாக BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே CMD BSNLஇடம் விவாதித்துள்ளது. 21.01.2019 அன்று மீண்டும் ஒருகடிதத்தை CMDக்கு BSNL ஊழியர் சங்கம் எழுதியுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
கடிதம் காண இங்கே சொடுக்கவும்