Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 23, 2019

8 லட்சம் பேர் வேலை நிறுத்தம்!

அரசு அடக்குமுறைக்கு ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் கண்டனம் 


இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56, 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார் பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் செவ்வாயன்று (ஜன. 22) தொடங்கியது. இதையொட்டி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.டேனியல் ஜெயசிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, மு.சுப்பிரமணியன், அ.மாயவன், எஸ்.சங்கர் பெருமாள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தகுமார், சத்தியநாதன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சுந்தரம்மாள், அருணா (ஆசிரியர் சங்கம்), டெய்சி (ஐசிடிஎஸ்) உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஏராளமான அனைத் துத் துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56, 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும், 3,500 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் கைவிட வேண்டும், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தாதே உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு. அன்பரசு, மு.சுப்பிரமணியன், மாயவன், சங்கர் பெருமாள் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“எங்களின் போராட்டம் 100 விழுக்காடு நியாயம் என்பதை உயர்நீதிமன்றமே அங்கீகரிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. ஆனால், தலைமைச் செயலாளரோ ஊதியம் பிடித்தம் செய்வோம் என்று மிரட்டல் கடிதம் அனுப்பி இந்த போராட்டத்தை நசுக்குவது, ஒடுக்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை, பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு ஜாக்டோ-ஜியோ அஞ்சாது” என்றனர்.எங்களது நியாயமான கோரிக்கைகளை போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க சுமார் 8 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். எனவே, உடனடியாக முதல்வர் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இன்று முதல் மறியல் போராட்டம் நடை பெறும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றும் தெரிவித்தனர்.கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்ததலைவர்கள், “தலைமைச் செயலாளர்21 மாத நிலுவைத் தொகையை பெற்றுவிட்டார். அவருக்கு ஓய்வூதியம் உண்டு. ஆனால், 5 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் கிடையாது. இந்த போராட்டத்திற்கு காரணம் அரசுதான். ஆகவே, தமிழக அரசும், முதல்வரும் இனியும் மவுனம் காக்காமல் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

Image result for theekkathir