Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 15 December 2018

சேலம் மாவட்ட செயற்குழு - 12.12.2018


BSNLEU சங்க  சேலம் மாவட்ட  செயற்குழு, 12.12.2018 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர், அஞ்சலியுறை வழங்கினார். தோழர் K . ராஜன், மாவட்ட உதவி தலைவர், வரவேற்புரை வழங்கினார். 

BSNLEU மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். 

பின்னர் நடைபெற்ற விவாதத்தில், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் பங்கு பெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதில் வழங்கியபின், அகில இந்திய மாநாட்டு சார்பாளர்கள், பார்வையாளர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

2019 ஜனவரி 8, 9 இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை, நமது மாவட்டத்தில்  வெற்றிகரமாக்குவது, கிளை மாநாடுகள் நடத்தாத கிளைகள் மாநாடுகள் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. தோழர் P . தங்கராஜ், மாவட்ட பொருளர் நன்றி கூறி, கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்