Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, November 23, 2018

கிளை செயலர்கள் கூட்டம் - 22.11.2018


BSNLEU சேலம் மாவட்ட சங்க "கிளை செயலர்கள்" கூட்டம், 22.11.2018, நேற்று, மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். 

தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர், அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் M . பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பு செயலர் அனைவரையும் வரவேற்றார். விவாத பொருள் ஏற்புக்கு பின், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரை வழங்கினார். 

பின்னர் நடைபெற்ற விவாதத்தில், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இடையில், TNTCWU மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், வாழ்த்துரை வழங்கினார். விவாதத்திற்கு, தோழர் E . கோபால், மாவட்ட செயலர்  பதில் அளித்த பின், தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

டிசம்பர் 3 முதல் நடைபெறவுள்ள கால வரையற்ற வேலை நிறுத்தத்தை நமது சேலம் மாவட்டத்தில் 100 சதம் வெற்றி பெற செய்வது, 28.11.2018 சிறப்பு கூட்டத்திற்கு அதிகப்படியான தோழர்களே திரட்டுவது, கஜா புயல் நிவாரண நிதி, வெண்மணி பொன்விழா சிறப்புமலர் விளம்பரம், உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்