Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 19, 2018

ஒப்பந்த ஊழியர்களுக்காக ஆர்ப்பாட்டம்


ஒப்பந்த ஊழியர்களுக்கு, மாதந்தோறும், 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், 2017-18ம் ஆண்டிற்கான சட்டபூர்வமான போனஸ் உடனடியாக வழங்க வேண்டும், திறனுக்கேற்ற கூலி, EPF/ESI அமுலாக்கத்தை முறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு கட்ட போராட்டம் நடத்த TNTCWU 6வது மாநில மாநாடு அறைகூவலுல் கொடுத்திருந்தது. 

அதன்படி, 11.10.2018 அன்று கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டாம் கட்ட போராட்டமாக, 17.10.2018 அன்று மாவட்ட தலைநகரங்களில், மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தபட வேண்டும். 

நமது சேலம் மாவட்டத்தில், மழை காரணமாக, மாலை நேர தர்ணா "ஆர்ப்பாட்டமாக" நடத்தப்பட்டது. 17.10.2018, அன்று சேலம் MAIN  தொலைபேசி நிலையம் நடைபெற்ற, போராட்டத்திற்கு தோழர் K . ராஜன், TNTCWU மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C . பாஸ்கர், போராட்டத்தை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . ஹரிஹரன், P . தங்கராஜு கருத்துரை வழங்கினார்கள். 

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளாக தோழர்கள் பங்குபெற்ற இந்த போராட்டத்தை தோழர் M . பன்னீர் செல்வம், மாவட்ட அமைப்பு செயலர், BSNLEU நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்