Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, October 16, 2018

TNTCWU மாநில மாநாட்டு அறைகூவலுக்கிணங்க மாலை நேர தர்ணா!

Related image


TNTCWU மாநில மாநாடு அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் திருப்பூரில் சிறப்பாக நடைபெற்றது. மாதந்தோறும் 7ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், 2017-18ம் ஆண்டிற்கான சட்டபூர்வமான போனஸ் உடனடியாக வழங்க வேண்டும், திறனுக்கேற்ற கூலி, EPF/ESI அமுலாக்கத்தை முறைப்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு கட்ட போராட்டம் நடத்த மாநாடு அறைகூவலுல் கொடுத்திருந்தது. 

அதன்படி, 11.10.2018 அன்று கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டாம் கட்ட போராட்டமாக, 17.10.2018 அன்று மாவட்ட தலைநகரங்களில், மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தவேண்டும். 

நமது சேலம் மாவட்டத்தில், நாளை, 17.10.2018, மாலை 3 மணி முதல் சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெறும். BSNLEU / TNTCWU தோழர்கள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU 
M . செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU