Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, September 15, 2018

மத்திய சங்க செய்திகள்


ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலக உத்தரவுகளை அமலாக்குக


சமீபகாலம் வரை JOINT GM(Pers) ஆக இருந்த திரு மனீஷ் குமார் அவர்கள் GM(Restg)ஆக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளார். 13.09.2018 அன்று தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் பல்பீர் சிங், அகில இந்திய தலைவர், தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்தரவுகள் மாநிலங்களில் அமலாக்கப் படாமல் இருப்பதை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர். 
இவற்றுள் குறைந்த பட்ச கூலி மற்றும் EPF அமலாக்கம் ஆகியவை மிக முக்கியமானது என்றும் அதற்கான உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினர். தனது ஒத்துழைப்பை உறுதி செய்த திரு மனீஷ் குமார் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

====================================================================

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் எடுத்திடுக

நிறுவனத்தின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் 30% ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் எழுதியது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்து அவர்களை வியாபார பகுதிகளில் லாபகரமாக பயன்படுத்தலாம் என BSNL CMD மற்றும் DIRECTOR(HR) ஆகியோரிடம் ஏற்கனவே BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்தது. இவர்களோடு பல கட்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இவர்கள் இருவரும் இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டபோதும், ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுப்பதற்கான எந்த ஒரு கடிதமும் வெளியிடப்படவில்லை. 

13.09.2018 அன்று GM(SR) அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் சந்தித்த போது DIRECTOR(HR) அவர்களின் உறுதி மொழியை விரைவில் அமலாக்க வேண்டும் என வற்புறுத்தினர். அவரும் இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி அளித்துள்ளார்.

====================================================================

பெயர் மாற்றக் குழுவின் கூட்டம்

GM(Resrg) திரு மனீஷ் குமார் அவர்களை BSNL ஊழியர் சங்க தலைவர்கள் 13.09.2018 அன்று சந்தித்த போது விடுபட்ட ஊழியர்களுக்கு பெயர் மாற்றும் பணியினை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள, கேட்டுக் கொள்ளப் பட்டது. இணைந்த பெயர் மாற்றக் குழுவின் கேடர்களின் பெயர் மாற்றம் தொடர்பான ஒரு சில முடிவுகளை நிர்வாகக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார். விடுபட்ட கேடர்களுக்கு மாற்று பெயர்களை இறுதி செய்ய செப்டம்பர் மாத இறுதிக்குள் இணைந்த பெயர் மாற்றக் குழுவின் கூட்டத்தை கூட்டுவதற்கு முயற்சி செய்வதாக GM(Resrg) தெரிவித்தார்.

====================================================================


தேசிய கவுன்சில் கூட்ட தேதி

BSNL ஊழியர் சங்க பிரதிநிதிகள் திரு A.M.குப்தா GM (SR) அவர்களை 13.09.2018 அன்று சந்தித்து அடுத்த தேசிய கவுன்சில் கூட்டத்தினை விரைவில் நடத்திட வற்புறுத்தினர். இதில் விவாதிக்கப்பட வேண்டியவை தொடர்பாக விஷயங்களை நிர்வாகத்திற்கு பட்டியலிட்டு தரப்பட்டு விட்டது. அடுத்த தேசிய கவுன்சில் கூட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என கடந்த தேசிய கவுன்சில் கூட்டம் நடந்த போது DIRECTOR(HR) உறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அதற்கான தேதி இறுதி படுத்தவில்லை. செப்டம்பர் இறுதிக்குள் கவுன்சில் நடத்த வேண்டும் என நமது தலைவர்கள் வற்புறுத்தினர். அவரும் விரைவில் தேசிய கவுன்சிலின் தேதியை இறுதி செய்வதாக உறுதி அளித்தார்.

====================================================================

மாநில கவுன்சில் கூட்ட தேதி 

09.10.2018 அன்று 24வது தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெறும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்