நமது மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு, தோழர் N. குமார் தோழர் N . தாமரைச்செல்வன் பணி நிறைவு பாராட்டு விழா, சேவை கருத்தரங்கம் என முப்பெரும் விழா, எடப்பாடியில் 23.05.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை எடப்பாடி தொலைபேசி நிலையத்தில், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, தோழர் N . குமார் ஏற்றி வைத்தார். பின்னர் ஸ்ரீ பருவதராஜகுல சமுதாயகூடத்தில் தோழர் காரல் மார்க்ஸ் 200 வது பிறந்த நாள் நினைவாக அவரது படத்திற்கு தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . சுப்பிரமணியன், மாலை அணிவித்து மரியாதை செய்த பின் கூட்டம் முறைப்படி துவங்கியது.
எடப்பாடி கிளை செயலர் தோழர் P . சண்முகம் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் G. நாராயணன், மாவட்ட அமைப்பு செயலர், அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
தோழர் S . சுப்பிரமணியன் தமிழ் மாநில உதவி செயலர், முறைப்படி செயற்குழுவை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், அறிமுக உரை வழங்கினார். தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, சிறப்புரை வழங்கினார்.
உணவு இடைவேளைக்கு முன்பு, தோழர் N . குமார், தோழர் N . தாமரைச்செல்வன் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அதில், தமிழ் மாநில முன்னாள் உதவி செயலர் தோழர் M . நாராயணசாமி கலந்து கொண்டு, தோழர்களை வாழ்த்தி, சிறப்புரை வழங்கினார். தோழர்கள் ஏற்புரை வழங்கினர். சென்ற செயற்குழுவுக்கு பின், நமது மாவட்டத்தில் பணி நிறைவு செய்த தோழர்கள் கௌரவ படுத்தப்பட்டனர்.
சேவை கருத்தரங்கில், சேவை சம்மந்தமான விவாதத்தில், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கியபின், வருவாய் உயர்வுக்கான வழிகள், நமது கடமைகள் விவாதிக்கப்பட்டு, உணவு இடைவேளைக்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின், செயற்குழு தொடர்ந்தது. செயற்குழு உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின், தள மட்ட போராட்டம் உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தோழர் P . தங்கராஜு, மாவட்ட பொருளர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்



















































































