BSNLEU இரும்பாலை கிளை செயலர் தோழர் R. ராமசாமி, 31.05.2018 அன்று இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, 28.05.2018, நேற்று, இரும்பாலை தொலைபேசி நிலையத்தில், தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
நமது BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் பன்னீர்செல்வம், சீனிவாசன், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார், காளியப்பன், இளங்கோவன், சுப்பிரமணி, வெங்கடேசன், உள்ளிட்ட முன்னணி தோழர்கள் கலந்து கொண்டோம்.
மெய்யனுர் கோட்ட பொறியாளர் திரு. பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள், விழாவில் கலந்து கொண்டு தோழரை கௌரவப்படுத்தினர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்