Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, April 8, 2018

தொழிற்சங்க வரலாற்றில் ஒரு மைல்கல் சிஐடியு வாழ்த்து

T. உதயகுமார்,உதவி தலைவர், 
சிஐடியு மாநிலகுழு


வீரம் செறிந்த மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் தொழிலாளர்களின் போராட்ட வெற்றி, தமிழக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். கடுமையான உழைப்பு சுரண்டல், பணி பாதுகாப்பற்ற சூழலில் 300க்கும் மேற்பட்ட இளம் தொழிலாளர்கள் சங்கமாவது என்ற முடிவில் அவர்களது தேர்வு சிஐடியு சங்கம்.கடந்த மார்ச் 25ல் எழுச்சியுடன் துவங்கப்பட்ட சங்கத்தின் பேரவையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் 22 பேரை, சங்கம் சேர்ந்த இரண்டே நாட்களில் எவ்வித முன்னறிவிப்பு மின்றி கெம்ப்ளாஸ்ட் நிர்வாகம் சட்டவிரோதமாக டிஸ்மிஸ் செய்தது. நாங்கள் செய்தது தவறு என்றால் நீதி மன்றம் செல்லுங்கள், உச்சநீதிமன்றம் வரை சென்று எங்கள் நடவடிக்கை சரிதான் என்று வாதிடுவோம். மீண்டும் பணியில் சேர வேண்டுமென்றால் 15, 20 ஆண்டுகள் நீதிமன்றத்தில் காத்து கிடக்க வேண்டும் என நிர்வாகம் கொக்கரித்தது. இதை வலுவாக எதிர்கொள்ள தொழிலாளர்கள் எடுத்த முடிவு நிர்வாகத்தை கதி கலங்க செய்தது. ஆம் வென்றே காட்டுவது என்ற தொழிலாளர்களின் உணர்ச்சி பிழம்பாய் மார்ச் 30ஆம் தேதி இரவு ஷிப்டில்ஆலை இயந்திரங்கள் நிறுத்தப்பட்டது. உள்ளிருப்பு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இதர ஷிப்ட் தொழிலாளிகள் ஆலை வளாகத்திற்குள் குவிந்தனர்.
மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகி யோர் கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக களமிறங்கினர். நூற்றுக் கணக்கான கலவர தடுப்பு காவலர்கள் ஆலையில் முகாமிட்டு அச்சுறுத்தல், மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

பொதுமக்களும், தொழி லாளர்களின் குடும்பத்தினரும் ஆலை கேட்டில் கூடி தொழிலாளர்களின் பிரச்சனையில், காவல் துறை, ஆர்டிஓ தலையீடை ஏற்க மறுத்து, தொழிலாளர் துறையே இதில் தலையிட அதிகாரம் படைத்தது என்றும், காவல்துறை நிர்வாக ஆதரவு நிலையை ஏற்க மறுத்து வாதிட்டனர். ஆலைக்குள்ளே காவல்துறை அத்துமீறி நுழைய அனுமதிக்கமாட்டோம் என உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள் உறுதிபட தெரிவித்து விட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் தொழி லாளர்களை வலுகட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சி தடுக்கப்பட்டது. வெளியாட்களை ஆலைக்குள் கொண்டு செல்லும் செயல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆறாவது நாளில் 15 தொழி லாளிகளின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்வதாக நிர்வாகம் முன்வந்த போது, 22 தொழிலாளர்களின் பணி நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும். அதை தவிர வேறு எந்த சமரசத்திற்கும் இடமில்லை என நிர்வாக ஆலோசனை நிராகரிக்கப்பட்டது. மாற்று உடையின்றி, வெளியில் சமைத்து அனுப்பப்பட்ட உணவு மட்டுமே உண்டு. 

எட்டு நாட்கள் உறுதியுடன் தொழிலாளர்கள் போரா ட்டம் தொடர்ந்தது. பிரச்சனைக்கு தீர்வு இல்லையேல் மாவட்டம் முழு வதுமுள்ள சிஐடியு ஊழியர்கள் மற்றும்பொதுமக்களை கொண்டு ஆலைவளாகத்தில் ஏப்ரல் 8 முதல் காத்திருப்பு போராட்ட அறிவிப்பும், அதற்கான தயாரிப்பும் மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை தொழி லாளர்கள் 22 பேரும் எவ்வித நிபந்தனையுமின்றி வேலைக்கு எடுத்து கொள்வது என்று எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தின் பேரில் சனிக்கிழமையன்று காலை 8 மணிக்கு ஆலை பழைய நிலைக்கு திரும்பியது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான கெம்ப்ளாஸ்ட்சன்மார் குரூப்ஸை எதிர்த்து உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்ட கெம்ப்ளாஸ்ட்தொழிலாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளை சிஐடியு மாநிலக்குழுஉரித்தாக்குகிறது. இப்போராட்டம் மேட்டூரிலுள்ள இதர மூன்று கெம்ப்ளாஸ்ட் நிறுவனங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்களிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

மோடி அரசின் குறிப்பிட்ட கால ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை பணி அமர்த்துவது என்ற மிகப்பெரிய கார்ப்பரேட் ஆதரவு கொள்கையே இங்கு கடந்த பல ஆண்டுகளாக சன்மார் நிறுவனம் நடைமுறைப்படுத்தி வந்தது. இங்கு அதற்கு எதிரான போராட்டம் இந்தியதொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு முன்னு தாரணமான போராட்ட தந்திரமாக எடுத்து கொள்ளப்பட வேண்டும். எல்லா இடத்திலும் இல்லாவிட்டாலும் சாத்தியமான இடங்களில் இதை தவிர்க்க வேண்டியதில்லை. ஆளும் வர்க்கம் மூர்க்கத் தனமாக தொழி லாளி வர்க்கத்தின் மீது தாக்குதலை தொடுக்கும்போது நேர் எதிர் வினை யாற்றும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கம் இன்றைய தேவை. கெம்ப்ளாஸ்ட் போராட்ட வடிவங்களை உள்வாங்கி கொள்வோம்.

Image result for theekkathir