Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, 28 March 2018

துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதை எதிர்த்து  ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக, 27.03.2018 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன், (BSNLEU), N . சந்திரசேகரன், (SNEA) கூட்டு தலைமை தாங்கினர்.

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, போராட்டத்தை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். தோழியர் உமாராணி (SNEA), பிரசாத் (AIBSNLEA), C. கமலக்கூத்தன் (FNTO), M. செல்வம் (TNTCWU) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

தோழர்கள் R . மனோகரன் (மாவட்ட செயலர் SNEA), E . கோபால், (மாவட்ட செயலர், BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தை, தோழர் S . ஹரிஹரன் (BSNLEU) நன்றி கூறி முடித்து வைத்தார். 

போராட்ட வாழ்த்துக்களுடன், 
E . கோபால்,
கன்வீனர், AUAB