துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக அடுத்த கட்ட போராட்டங்கள்
27.03.2018, நேற்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL மத்திய சங்க தலைவர்கள் டில்லியில் ஒன்றுகூடி, துணை டவர் நிறுவன பிரச்சனையில்,அடுத்த கட்ட இயக்கங்கள் சார்பாக விவாதித்தனர். அதன்படி, போராட்டத்தை தீவரபடுத்தும் விதமாக 12.04.2018 அன்று மாவட்ட, மாநில மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களின் முன்பு பெருந்திரள் தர்ணா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
19.04.2018 அன்று அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்வது, ஆளுநரிடம் மனு அளிப்பது, 09.05.2018 அல்லது 10.05.2018 அன்று டில்லியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்துவது, அதில் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தனையையும் மீறி, அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாக, DPE செயலரை சந்திப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
=========================================================
தேவையற்ற செலவினங்களை தடுத்து நிறுத்த ஆலோசனைகள்
BSNL நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் நிர்வாகம் ஊழியர்களின் சலுகைகளை பறிக்கிறது. DIRECTOR(HR) அவர்களை 28.03.2018 அன்று நமது பொது செயலாளர் சந்தித்த போது இதன் மீதான தனது வருத்தத்தை பதிவு செய்ததோடு, அனைத்து சங்கங்களின் கூட்டம் ஒன்று நடத்தி தேவையற்ற செலவினங்களை குறைப்பதற்கான ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்றும் அதுவே செலவினங்களை குறைப்பதற்கான வழிகளை கண்டு பிடிக்க உதவும் என்றும் தெரிவித்தார். இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட DIRECTOR HR, அத்தகைய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் படி திரு யஷ்வந் நாத்சிங் GM|(BFCI) அவர்களுக்கு வழிகாட்டினார். விரைவில் அந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள எந்த ஒரு தோழரும் தன்னுடைய கருத்துக்களை மத்திய சங்கத்திற்கு bsnleuchq@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
=========================================================
யூனியன் வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்
யூனியன் வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ள சூழலில் அதனை புதுப்பிக்க வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகத்தில் தொடர்ந்து BSNL ஊழியர் சங்கம் வற்புறுத்தி வந்தது. தற்போது அதற்கான ஒப்பந்தம் கையொப்பம் ஆகிவிட்டது.
=========================================================
தேவையில்லை CHECK OFF முறை
அடுத்த உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை CHECK OFF முறையில் நடத்துவது என கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு கொடுத்திருக்கும் முன்மொழிவு தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் DIRECTOR (HR) திருமிகு சுஜாதா T ரே அவர்களை 28.03.2018 அன்று சந்தித்து விவாதித்தார். CHECK OFF முறை தேவையற்ற முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளுக்கும் வழிவகுத்து BSNLல் தேவையற்ற சூழலை உருவாக்கிவிடும் என்று எடுத்துரைத்த நமது பொது செயலாளர் அடுத்த உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலும், ரகசிய வாக்கெடுப்பு முறையிலேயே நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கான நமது சங்கத்தின் கடிதத்தையும் வழங்கினார். இதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட DIRECTOR (HR) நமது சங்கத்தின் கருத்துக்களை கணக்கில் கொள்வதாக உறுதி அளித்தார்.
தோழமையுடன்,
E . ,கோபால்,
மாவட்ட செயலர்
UNION BANK புரிந்துணர்வு ஒப்பந்தம் காண இங்கே சொடுக்கவும்