Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, October 4, 2017

2017 டிசம்பர் 12, 13 இரண்டு நாள் வேலைநிறுத்தம்

Image result for strike


இன்று, [04.10.2017] டில்லியில், 3வது ஊதிய மாற்றம் மற்றும் துணை டவர் அமைக்கும் முயற்சி, சம்மந்தமாக விவாதிக்க, அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, AIGETOA, SEWABSNL, BSNLMS, BSNLOA, ATM மற்றும்  TOABSNL சங்க தலைவர்கள்/பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

26.09.2017 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியாக, நடைபெற்ற இந்த கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கைகள்/பிரச்சனைகள் சம்மந்தமாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. சிறப்பான ஊதிய மாற்றம் பெறவும், துணை டவர் அமைக்கும் முயற்சியை தடுக்கவும், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 

01. " All Unions and Associations of BSNL" என்ற புதிய பெயரில், ஒரே பதாகையின் கீழ், இனி இந்த அமைப்பு செயல்படும்.  

02. அமைப்பில் உள்ள அனைத்து பொது செயலர்களும் கையொப்பமிட்ட பின், நிர்வாகத்திற்கும், அரசாங்கத்திற்கும்  கூட்டாக மகஜர் வழங்கப்பட்டு போராட்ட அறைகூவல் தெரிவிக்கப்படும். 

03. சிறப்பான ஊதிய மாற்றத்தை, 01.01.2017 முதல் பெறவும், இரண்டாவது ஊதிய குழுவில் தீர்வு எட்டப்படாத பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தியும், நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் பெற்றிடவும், துணை டவர் அமைக்கும் முயற்சியை தடுக்கவும் கீழ்கண்ட, இயக்கங்கள் கூட்டாக நடத்தப்படும். 

அ. 16.10.2017 அன்று கார்ப்பரேட், மாநில, மாவட்ட அலுவலகங்களில், ஆர்ப்பாட்டம்.

ஆ. 15.11.2017 க்குள் பாராளமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மகஜர் வழங்குவது.

இ. 16.11.2017 அன்று கார்ப்பரேட், மாநில, மாவட்ட மட்டத்தில் "மனித சங்கிலி போராட்டம்".

ஈ . 2017 டிசம்பர் 12 மற்றும் 13 "இரண்டு நாள் வேலைநிறுத்தம்".

உ. அதன்பின்பும் பிரச்சனைகள் தீரவில்லை என்றால், "காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்" ஈடுபடுவது. தேதி பின்னர் முடிவு செய்யப்படும். 

அடுத்த கூட்டம் 23.10.2017 அன்று நடைபெறும். அனைத்து சங்கங்களும், அமைப்புகளும் ஒன்று பட்டு முடிவுகள்  எடுத்திருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். நிச்சயம் கோரிக்கைகள் வெற்றி பெறும் என ஆர்ப்பரித்து போராட உடனடியாக தயாராகுவோம்.  

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்