Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, April 25, 2017

TNTCWU கிளை மாநாடு - திருச்செங்கோடு



TNTCWU திருச்செங்கோடு கிளையின் மாநாடு, 22.04.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் கோபாலன், கிளை தலைவர் தலைமை தாங்கினார். அஞ்சலி, வரவேற்புரைக்கு பின், தோழர் ராஜன், TNTCWU மாவட்ட தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்தார். 

BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S .தமிழ்மணி, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் சிறப்புரை வழங்கினார்கள். TNTCWU சேலம் மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், BSNLEU கிளை செயலர்கள் தோழர்கள் ராஜலிங்கம் (திருச்செங்கோடு நகரம்), பரந்தாமன் (பள்ளிபாளையம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர் கோபாலன் தலைவராகவும், தோழர் வெங்கடேஸ்வரன் செயலராகவும், தோழர் விஜயகுமார் பொருளாளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய கிளை செயலர் தோழர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்