Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, September 9, 2016

மாலை நேர தர்ணா - சேலம் - 08.09.2016



08.09.2016 அன்று மத்திய சங்க அறைகூவல்படி, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நமது மாவட்ட சங்கம் சார்பாக, சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, மாலை நேர தர்ணா சிறப்பாக நடைபெற்றது. 

போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார். அவர்தம் தலைமை உரையில், 02.09.2016 போராட்டம், 24 அம்ச கோரிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கினார். மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஹரிஹரன், தங்கராஜு, சண்முகம், கண்டன உரை வழங்கிய பின், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன பேருரை வழங்கினார். 02.09.2016 ஒரு நாள் வேலை நிறுத்தம், நமது மாவட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம், போனஸ் கமிட்டி கூட்டங்கள், அதன் முடிவுகள், இன்றைய போராட்ட நோக்கம், கோரிக்கைகள், நமது நிலைப்பாடு, BSNL நிறுவன வளர்ச்சி, போட்டி சூழல், நமது இலக்குகள், அகில இந்திய மாநாடு நன்கொடை உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். 

இறுதியாக, மாவட்ட உதவி தலைவர் தோழர் விஜயன் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவ்துலுமிருந்து, சுமார் 120 தோழர்கள் பங்கு பெற்றனர்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்