Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, May 13, 2016

BSNLEU சங்கத்தின் தொடர் ஆறாவது வெற்றி! சாதனை சரித்திரம் தொடர்கிறது!!



BSNL ஊழியர்கள் மீண்டும் ஒரு முறை BSNLEU சங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பித்துள்ளனர். நமது சங்கம் 6வது முறையாக தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலில், 81150 வாக்குகள் பெற்று, 28983 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். 35 மாநிலங்களில், 27 மாநிலங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். 

எந்த பொதுத் துறையிலும் ஒரு சங்கம் தொடர்ச்சியாக 6 முறை வென்றதாக வரலாறு இல்லை. ஆனால் BSNL அரங்கில் BSNLEU ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. BSNL ஊழியர்கள் BSNLEU தான் சிறந்த சம்பள மாற்றத்தை பெற்றுத்தர முடியும் என நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேல் BSNLEU தான் BSNLன் ஒரு சத பங்குகளை கூட விற்க விடாமல் தடுத்துள்ளது என அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். எனவேதான் BSNLEUவை 6வது முறையாக தேர்ந்துடுத்துள்ளனர்.

தமிழ் மாநிலத்தில் உள்ள 18 மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். 4967 வாக்குகள் பெற்று, சென்ற முறையை விட இந்த முறை சுமார் 2 சத வீத வாக்குகள் அதிகமாக  நாம் பெற்றுள்ளோம். 

சேலம் மாவட்டத்தில் 483 வாக்குகள் பெற்றுள்ளோம். சென்ற முறையை விட இந்த முறை சுமார் 3 சத வீத வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளோம். 

மகத்தான இந்த வெற்றிக்காக, உழைத்திட்ட அத்துனை மாவட்ட சங்க, கிளை சங்க நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும், முன்னணி ஊழியர்களுக்கும், கூட்டணி சங்கமான SNATTA அமைப்பிற்க்கும், அதன் நிர்வாகிகளுக்கும், வாக்களித்த அத்துனை வாக்காளர்களுக்கும்  நமது நெஞ்சு நிறை நன்றிகள்.  

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
அகில இந்திய முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்
தமிழ் மாநில முடிவுகள் காண இங்கே சொடுக்கவும்