Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, 29 May 2016

கிளை செயலர்கள் கூட்டம் 27.05.2016


27.05.2016 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில், "கிளை செயலர்கள்" கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு, 
தோழர் S . தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகபடுத்தி, சிறப்புரை வழங்கினார். 21 கிளை செயலர்கள், 6 மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். தேர்தல் முடிவுகள் பரிசிலிக்கப்பட்டது. 

பின்னர், 04.06.2016 அன்று வெற்றி விழாவை ஆத்தூரில் முப்பெரும் விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டது. வெற்றி விழா, சேவை கருத்தரங்கம், பணி நிறைவு பாராட்டு விழா  என முப்பெரும் விழா நடைபெறும். 

நமது தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதா கிருஷ்ணன் விழாவில் கலந்து கொள்கிறார். சேவை கருத்தரங்கில், நமது முதன்மை பொது மேலாளர் உயர்திரு. S . சபீஷ், துணை கோட்ட மேலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். நமது மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெறும். 

கிளை செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கிளைகள் முழுமையாக அமுல் படுத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்