Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 7 April 2016

TTA பயிற்சிக்காலம் - BSNLEU கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி!

Image result for jto exam 2016



TTA தோழர்கள் JTO தேர்வெழுத, 5 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும். இந்த 5 ஆண்டு சேவை அவர்களது பயிற்சிக்காலத்தில் 
இருந்து கணக்கிடப்படவில்லை. அவர்களது பணி நிரந்தரத்தேதியில் இருந்துதான் கணக்கிடப்பட்டு வந்தது.

பயிற்சிக்காலம் ஆண்டு உயர்வுத்தொகைக்கு 
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்போது 
தேர்வுக்கும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென நமது BSNLEU சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தற்போது JTO தேர்வெழுத தேவையான சேவைக்காலத்திற்கு TTA தோழர்களது பயிற்சிக்காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமென BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

இது நமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி !

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்