Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 2 January 2016

நாமக்கலில் பணி நிறைவு பாராட்டு விழா

 

நமது இயக்கத்தின் மூத்த தோழர் V . கோபால், கிளைத்  தலைவர், நாமக்கல் நகர கிளை மற்றும் தோழர் A . அங்குராஜ், கிளைச்  செயலர், நாமக்கல் ஊரக கிளை ஆகியோர்களது  பணி நிறைவு பாராட்டு விழா நாமக்கல் தொலைபேசி நிலையத்தில், 31.12.2015 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. 

கோட்டப்  பொறியாளர் திருமதி உமா, தலைமை தாங்க, துணைப்  பொது மேலாளர் (ஊரகம்) திரு. முத்துசாமி, முன்னிலை வகித்தார். 

மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர், தோழர் E . கோபால், மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, ஆகியோர் கலந்து கொண்டு தோழர்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கி, கௌரவப்படுத்தினர். 

நிகழ்வில், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் தங்கராஜ், சண்முகம், கனகராஜ், கிளைச்செயலர்கள் கோவிந்தராஜு, ராமசாமி, ராஜன் உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வாழ்த்துகளுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்