Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 18, 2015

10-12-2015 அகில இந்திய FORUM கூட்ட முடிவுகள்

Image result for service with a smile



கடந்த 10-12-2015 அன்று,டெல்லியில் நடைபெற்ற Forum of BSNL Unions and Associations (அகில இந்திய கூட்டம்) கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.
1-1-2016  முதல் 100  நாட்கள் "SERVICE WITH A SMILE", "புன்னகையுடன் சேவை" என்ற இயக்கத்தை நடத்திட  Forum முடிவெடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளது.  
அதன்படி,
1. மொபைல் ,லேண்ட்லைன் & ப்ராண்ட் பேன்ட் இணைப்புகளை தீவிரப் படுத்துதல்.
2. பழுதற்ற சேவையை உத்தரவாத படுத்துதல்.
3. தரைவழி,  ப்ராண்ட் பேன்ட் மறு  இணைப்பு வழங்குதல்.
4. EB, Leased Lines , CUG, 3-G வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துவது.
5. MNP பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்துவது

மேலும், BSNLஓய்வூதியர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பு வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்து Forum கடுமையான அதிருப்தியை தெரிவித்தது. நீண்டகாலமாக இக் கோரிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருவதால் நாடுமுழுவதும் எதிர்வரும் 22-12-2015 கோரிக்கையை தீர்க்க வலியுறித்தி " கருப்பு பேட்ச் " அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது.

மேலும், 78.2% பஞ்சப்படி இணைப்பின் அடிப்படையில் அலவன்ஸ்களை உடனடியாக உயர்த்த வேண்டும் என வலியுறித்தி கடிதம் எழுதுவது எனவும் முடிவு செய்துள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்