Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, October 27, 2015

செய்திகள் சில வரிகளில்...



1. 27.10.2015 இன்று நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி ஆகியோர் CMD அவர்களை நேரில் சந்தித்து BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இடைக்கால போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். BSNL வருவாய் அதிகரித்து உள்ளது, மொபைல், தரை வழி இணைப்புகள் அதிகரித்துள்ளது, எனவே உடனடியாக இடை கால போனஸ் வழங்க வேண்டும் என வாதிட்டனர். இடைக்கால போனஸ் வழங்கினால், ஊழியர்கள் உற்சாகமடைந்து, சேவை மேலும் சிறப்பாக வழங்குவர் என நமது தலைவர்கள் CMD யிடம் தெரிவித்து வந்துள்ளனர். 

2. நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, திரு A .M .குப்தா, GM (Restt), அவர்களை நேரில் சந்தித்து பதவிகள் பெயர் மாற்ற உத்தரவை விரைந்து வெளியிட வலியுறுத்தினார். 

 3. JTO பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு பயணப்படி முன்பணம் (Travelling Allowance Advance) உடனடியாக வழங்க வேண்டும் என நமது பொது செயலர் தோழர் அபிமன்யூ, அவர்கள் GM (T&BFCI), அவர்களை சந்தித்து பேசியுள்ளார் . உரிய நிதி ஒதுக்கீடு தமிழ் மாநிலத்திற்கு அனுப்ப GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

4. ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/-ஐ ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாத ஊதியத்தை ரூ.10,000/-லிருந்து ரூ.21,000/-மாக  உயர்த்துவதற்கும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

5. மார்க்கெட்டிங் பணியை தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது செப்டம்பர் மாதம் 1 லட்சம் சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .

6. மாறுதல் கொள்கையில் (Transfer Policy ) கிராமப்புற பகுதியில் சேவைக்கு 3 ஆண்டுகள் Tenure என நிர்ணயம் . அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .மாறுதல் கொள்கையில் இந்த மாற்றத்திற்கான நமது கருத்துக்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்