Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, 29 October 2014

"கிளை செயலர்கள்" கூட்ட முடிவுகள்



28.10.2014 அன்று "கிளை செயலர்கள்" கூட்டம் மாவட்ட உதவி தலைவர் தோழர் V. சின்னசாமி, தலைமையில் நடை பெற்றது. 
தோழர் P. தங்கராஜ், மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர்  M. பெருமாள், மாவட்ட உதவி தலைவர் அனைவரையும் வரவேற்றார். 

மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி, கூட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால் கூட்ட விவாத பொருளை விளக்கி சிறப்புரை வழங்கினார். 

19 கிளை செயலர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர். மாவட்ட சங்க உதவி செயலர்கள் தோழர்கள் ஹரிஹரன், சண்முகம் உரை வழங்கினர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டது. 

1. அடுத்த மாவட்ட செயற்குழுவை ஆத்தூரில் 18.11.2014 அன்று நடத்துவது. 

2. அந்த செயற்குழுவில் 7வது மாவட்ட மாநாடு வரவேற்பு குழுவின் ரசிது புத்தகங்களை, அடிக்கட்டுடன் இது வரை வழங்காத கிளைகள் நிதியுடன் வழங்க வேண்டும். 

3. 27.11.2014 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது. 

மாவட்ட உதவி பொருளர் தோழர் G. விஜய் ஆனந்த் நன்றி கூற கூட்டம் முடிவு பெற்றது.