Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, October 25, 2026

சேம நல வாரிய சிறப்புக் கடன் விண்ணப்பம்!


கடந்த நான்கு வருடங்களாக, சேம நல வாரிய நிதியில் இருந்து, தீபாவளி திருநாளை கொண்டாடும் வகையில்,  உறுப்பினர்களுக்கு சிறப்பு கடன் கிடைக்க வழி வகை செய்து வருகிறோம். கடந்த 16.10.2026 அன்று நடைபெற்ற 33வது வாரிய கமிட்டி கூட்டத்தில், இந்த வருடமும், சிறப்புக் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். கூட்டம் ஏக மனதாக நமது கோரிக்கையை, ஏற்றுக் கொண்டது. 

அதன் அடிப்படையில், கூட்ட முடிவுகள் மற்றும் சிறப்பு கடன் விண்ணப்பத்தை, சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முதலில் வரும், 140 உறுப்பினர்களுக்கு, ₹12,000 சிறப்பு கடன் வழங்கப்படும். மாதம் ₹1,200 பிடித்தம் செய்யப்படும்.11வது மாதத்தில் 5 சத வீத வட்டி பிடித்தம் செய்யப்படும்.

விண்ணப்பங்களை, வருகிற 27.10.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல், 29.10.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள், GM அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், 2026 செப்டம்பர் மாத ஊதியப்பட்டியல் இணைக்கப்பட வேண்டும். கடன் தொகை, அநேகமாக 30.10.2026 அன்று, NEFT / RTGS வாயிலாக, உறுப்பினரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.

தோழமையுடன்,
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்