சேலம் GM அலுவலக கிளையின், 12வது மாநாடு, 09.10.2026 அன்று, GM அலுவலகம், பழைய CMTS அறையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் R. லோகநாதன், கிளை தலைவர், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, தோழியர் K. அமுதா, AOS ஏற்றி வைத்தார். மாநாட்டு அரங்கில், தோழியர் D. கவிதா, மாநிலக்குழு, BSNLWWCC அஞ்சலியுறை வழங்க, தோழர் J. ஸ்ரீனிவாசராஜு பொறுப்பு செயலர் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து, தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், துவக்கவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து, தோழர் M. செல்வம், மாவட்ட செயலர், TNTCWU, தோழர் S. தமிழ்மணி, மாவட்ட செயலர், AIBDPA, தோழர் R. ரமேஷ், மாவட்ட பொருளர், தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட செயலர், மாநாட்டு பேருரை வழங்கினார்.
பொறுப்பு கிளை செயலர், செயல்பாட்டு அறிக்கையை, சமர்பித்த பின், கிளை பொருளர் தோழர் R. சங்கர், வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சார்பாளர்கள் விவாதத்திற்குப் பின், இரண்டும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலர் நடத்தி வைத்தார். தோழர் R. லோகநாதன், தலைவராகவும், தோழர் J. ஸ்ரீனிவாசராஜு செயலராகவும், தோழர் R. சங்கர் பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
மாநாட்டு புதிய நிர்வாகிகள் பட்டியலையும், மாநாட்டு தீர்மானங்களையும், தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் முன்மொழிய, தோழர் N. பாலகுமார், மாவட்ட உதவி தலைவர் வழிமொழிந்தார்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை, தோழியர் C. லாவண்யா, மாவட்ட உதவி செயலர், தோழர் P. சந்திரன், மாவட்ட அமைப்பு செயலர், தோழர் N. சிவகுமார், கிளை செயலர், செவ்வை கிளை, தோழர் K. சின்னசாமி, மாவட்ட உதவி தலைவர் ஆகியோர் வாழ்த்தினார்கள். நல்ல பல தீர்மானங்களை நிறைவேற்றிய பின், தோழர் R. சங்கர், கிளை பொருளர், நன்றி கூறி, மாநாட்டை நிறைவு செய்தார்.
சிறப்பான மாநாட்டு செங்கொடிக்கம்பம், தோரணங்கள், கொடிகள், அமைதியான இடம், சிறப்பான அறிக்கை, ஆரோக்கியமான விவாதம், மாநாடு துவங்குவதற்கு முன் சூடான தேநீர், மாநாடு நிறைவு பெற்றபின் சுவையான மதிய உணவு, அன்பான உபசரிப்பு, தலைவர்களுக்கு முறையான பயண ஏற்பாடுகள், கிளை தோழர்களில், ஒரு தோழரை தவிர, பெரும்பான்மையான தோழர்களின் பங்கேற்பு என சிறப்பான ஏற்பாடுகள் செய்த, GM அலுவலக கிளை சங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும், தகும்.
கூட்டு சிந்தனை, கூட்டு முடிவு, கூட்டு செயல்பாடு, என மாவட்ட தலைவர், மாவட்ட உதவி தலைவர் உள்ளிட்ட தோழர்களின் இணைந்த பங்களிப்பு, மாநாட்டை வெற்றி பெற செய்தது என்று சொன்னால், அது மிகையல்ல. புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.










































