23.06.2026 அன்று, மதுரை யூனியன் கிளப், கூட்ட அரங்கில், BSNLEU தமிழ் மாநில செயற்குழு கூட்டம், சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. மகேஸ்வரன், மாநில தலைவர், தலைமை தாங்கினார். தோழர் அனிமேஷ் மித்ரா பொது செயலர், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். தோழர் B. மாரிமுத்து, மாநில செயலர், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, அறிமுகவுரை வழங்கினார்.
தோழர் P. அபிமன்யு, அகில இந்திய உதவி தலைவர் சிறப்புரை வழங்கினார். தோழர் S. செல்லப்பா, அகில இந்திய உதவி பொது செயலர், கருத்துரை வழங்கினார். மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் முழுமையாக கூட்டத்தில் கலந்து கொண்டனர், விவாதத்தில் பங்குபெற்றனர். விரிவான அறிக்கை, மாநில சங்கத்தால் வெளியிடப்படும்.











