13.12.2025 அன்று நடைபெற்ற BSNLEU மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், டெண்டர்கள் விடும் பொழுது ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், EPF / ESI உள்ளிட்ட சமூக சலுகைகளை அமுதாக்குவது தொடர்பாக கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்தரவுகளை மேற்கோள் காட்டி, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட பொது மேலாளர்களிடமும் மனு கொடுக்கும் இயக்கம் இன்று (23.12.2025) சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் இந்த இயக்கம், CoC சார்பாக, சேலம் பொது மேலாளர் அலுவலகத்தில், உணவு இடைவேளையில், சிறப்பாக நடைபெற்றது. முதலில் மாவட்ட பொது மேலாளர் திரு ரவீந்திர பிரசாத், ITS., அவர்களை சந்தித்து மகஜர் கொடுக்கப்பட்டது. பின்னர் வாயிற் கூட்டம் நடைபெற்றது.
BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தோழர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்






















