காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற, கடந்த மத்திய செயற்குழுவில், 2026 ஜனவரி மாத இறுதியில், ஒரு நேரடி மத்திய செயற்குழு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. இந்த மத்திய செயற்குழுவை மங்களூருவில் நடத்த, கர்நாடக மாநில சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது பாராட்டத்தக்கது. 2026, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில், மத்திய செயற்குழு நடைபெறும் என, கர்நாடக மாநில சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றபடி அனைத்து மத்திய செயற்குழு உறுப்பினர்களும், பயண ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியிடப்படும்.
இந்த மத்திய செயற்குழுவை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்காக, மங்களூர் மாவட்ட சங்கத்திற்கும், கர்நாடக மாநில சங்கத்திற்கும், மத்திய சங்கம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLEU
