நாள்: 08.01.2026, வியாழக்கிழமை
நேரம்: மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை
இடம்: பொது மேலாளர் அலுவலகம், சேலம்-7
நிர்வாக குழு மற்றும் இயக்குனர் குழுவின் ஒப்புதலுக்கு, ஊதிய உடன்பாட்டை முன் வைக்காமல், BSNL நிர்வாகம், ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. ஊதிய உடன்பாட்டிற்கு ஒப்புதல் தர நீண்ட காலதாமதம் ஆவது, ஊழியர்கள் மத்தியில் பரவலான மனக்கசப்பை உருவாக்கி உள்ளது. இந்தப் பின்னணியில், 18.12.2025 அன்று, அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், 2026, ஜனவரி, 8ஆம் தேதி, நாடு தழுவிய எதிர்ப்பு இயக்கத்தை நடத்துவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை, இயக்குனர் குழுவின் ஒப்புதலுக்கு வைத்து, அதன் பின் DoTயின் ஒப்புதலுக்கு அனுப்புவது தொடர்பாகவும், தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநிலங்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும், நிர்வாகத்தின் அணுகுமுறையை கவனிப்பது என்றும் அந்தக் கூட்டம் முடிவு செய்தது. எதிர்வரும் நிர்வாக குழு கூட்டத்தில், ஊதிய உடன்பாடு ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை என்றாலும், மேற்கண்ட மனிதவளப் பிரச்சனைகளில், நிர்வாகத்திடம் இருந்து ஒரு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றாலும், இந்த மாத இறுதியில், ஒரு போராட்ட இயக்கத்திற்கான அறிவிப்பை, நிர்வாகத்திற்கு வழங்குவது என்றும் முடிவு செய்யப் பட்டிருந்தது.
அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மூன்றாவது PRC மற்றும் ஊதிய உடன்பாட்டை தீர்வு காண்பது உள்ளிட்ட ஊழியர் பிரச்சனைகளில், BSNL நிர்வாகத்தின் மாறுபட்ட அணுகுமுறை தொடர்ந்தது என்றால், நாடு முழுவதும் உள்ள ஊழியர்களும், அதிகாரிகளும், 2026, ஜனவரி, 8ஆம் தேதி, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பார்கள்.
மத்திய சங்கங்களின் அறைகூவல் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில், 08.01.2026 அன்று, GM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
