Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, February 9, 2025

11வது சேலம் மாவட்ட மாநாட்டு தீர்மாணங்கள்


05.02.2025 அன்று சேலத்தில் நடைபெற்ற 11வது மாவட்ட மாநாட்டில், ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. BSNL நிறுவனத்திற்கு நிபந்தனையின்றி, 4G / 5G சேவை வழங்க வேண்டும். 

2. தேசிய பணமாக்கல் திட்டம் (NMP) என்ற பெயரில், BSNL நிறுவனத்தின் சொத்துக்களை விற்க கூடாது.

3. ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றம், 01.01.2017 முதல் அமுல்படுத்த  பட வேண்டும்.

4. புதிய ஓய்வூதியம், 01.01.2017 முதல் அமுல் படுத்தப்பட வேண்டும்.

5. BSNL லில் பணியமர்த்தப்பட்ட  ஊழியர்களுக்கு, 30 சதவீத ஓய்வூதிய பலன்கள் அமுல் படுத்த பட வேண்டும். 

6. இரண்டாவது VRS திட்டம் அறிமுகப்படுத்தக்கூடாது.

7. TT / JE / JTO / JAO இலாக்கா போட்டி தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும் 

8. TT / JE / JTO / JAO போட்டி தேர்வுகள் எளிய முறையில் இருக்க வேண்டும்

9. TCS நிறுவன சேவை குறைபாடு சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில், பணி நீக்கம் செய்யக்கூடாது. 

11. BSNL நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் பயன் இல்லாத JOB CONTRACT TENDER முறை, கை விடப்பட வேண்டும். 

12. ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். 

13. ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை உடனடியாக வழங்க வேண்டும்.

14. ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF / ESI சமூக பாதுகாப்பு சலுகைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.  

15. அனைத்து தொலைபேசி நிலையங்கள் அலுவலகங்கள் முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட வேண்டும். 

16. கழிவறைகள் முறையாக பராமரிக்க வேண்டும். 

17. மூடப்பட்ட தொலைபேசி நிலையங்களில், டவர் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு அலுவலர்கள் வரும் நிலையங்களுக்காவது, House keeping  டெண்டர் விடப்பட்டு அலுவலகத்தை சுத்தம் செய்ய, ஏற்பாடு செய்ய வேண்டும்

18. இலாக்கா ஊழியர்களுக்கு, விரைவாக, SMART IDENTITY CARD வழங்க வேண்டும் 

தோழமையுடன், 
E. கோபால்,
OG மாவட்ட செயலர்