BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் தோழர் C.K. குண்டண்ணா,AGS ஆகியோர் 05.07.2024 அன்று DIRECTOR (FINANCE) அவர்களை சந்தித்து, கீழ்கண்ட ஊழியர்களின் முக்கியமான பிரச்சனைகளை விவாதித்தனர்:-
1. ஊழியர்களின் மொத்த ஊதியத்தில், வருமான வரிக்காக 20% பிடித்தம்.
ஆதாருடன், PAN கார்டை இணைக்காத ஊழியர்களின், மொத்த வருமானத்தில், 20%ஐ வருமான வரியாக பிடித்தம் செய்ய வேண்டும் என கார்ப்பரேட் அலுவலகம், உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை நிறுத்தி வைத்து, ஆதாரை PAN கார்டுடன் இணைப்பதற்கு, ஊழியர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் கோரியது. மேலும் இது தொடர்பாக DIRECTOR (FINANCE)க்கு BSNL ஊழியர் சங்கம், கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தது.
இது வருமான வரி துறையிடம் இருந்து வந்துள்ள உத்தரவு என்றும், அது கண்டிப்பாக அமலாக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என DIRECTOR (FINANCE) தெரிவித்தார். PAN கார்டை ஆதருடன் இணைக்காத ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் 20 சதவிகிதத்தை, BSNL நிர்வாகம், ஏற்கனவே வருமான வரி துறைக்கு கட்டி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இவ்வாறு BSNL பிடித்தம் செய்யும் தொகையினை, வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது, வருமான வரி துறை திரும்ப வழங்கி விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
2. அஸ்ஸாம் மாநிலத்தில் 2024 பிப்ரவரி 16 வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதற்காக அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு தேதியை (DNI) தள்ளி போவது
இது தொடர்பான கோப்பு கார்ப்பரேட் அலுவலகத்தின் CA பிரிவில் தேங்கி கிடப்பதால், கார்ப்பரேட் அலுவலகத்தின் ERP பிரிவின் செயல்பாடுகள் தொடர்பான தங்களின் வருத்தத்தை, நமது சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக CGM(SR) மற்றும் PGM(ESTT) ஆகியோருடன் விவாதித்து, அஸ்ஸாம் மாநிலத்திற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என DIRECTOR (FINANCE) உறுதி அளித்துள்ளார்.
3. EPF திட்டத்திற்கு மாற்றப்பட்ட ஊழியர்கள் கட்டிய GPF பணத்தை திரும்ப தருவது.
ஒடிசா மாநிலத்தில் பணியாற்றும், GPF திட்டத்தில் இருந்து EPF திட்டத்திற்கு மாற்றப்பட்ட ஊழியர்களுக்கு, கடந்த இரண்டு வருடங்களாக EPF திட்டம் அமலாக்கப்படாமல் உள்ளது. இந்த விஷயத்தில் விளக்கம் கேட்டு, அந்தக் கோப்பை கார்ப்பரேட் அலுவலகத்தின் CA பிரிவிற்கு, CGM(SR) அனுப்பி உள்ளது என்கிற செய்தியை DIRECTOR(FINANCE)ன் கவனத்திற்கு தொழிற்சங்க தலைவர்கள் கொண்டு வந்தனர். அதே போன்று, CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் எழுதிய கடிதத்தின் நகலையும் DIRECTOR(FINANCE) இடம் வழங்கினர்.
CGM (SR)உடன் விவாதித்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக DIRECTOR(FINANCE) உறுதி அளித்தார்.
4. பல மாநிலங்களில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது.
ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான நிதியை, கார்ப்பரேட் அலுவலகம் விடுவித்த பின்னரும், ஒப்பந்த தாரர்கள், பல காரணங்களை கூறி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் உள்ள பிரச்சனை தொடர்பாக, தொழிற்சங்க தலைவர்கள் கேள்வி எழுப்பி விரிவாக விவாதித்தனர்.
ஒப்பந்தக் காரர்களுக்கென தனியான PORTAL ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த DIRECTOR (FINANCE), அவர்களுக்கான நிதியை விடுவிப்பதற்கு, ஒப்பந்ததாரர்கள் பல அடிப்படையான விவரங்களை அவர்கள் நிரப்ப வேண்டும் என தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் கொடுக்கும் குறிப்பிட்ட பிரச்சனைகள் மீது, அனைத்து மாநில தலைமை அதிகாரிகளுக்கும், பொருத்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரச்சனைகளின் விவரங்களை நிர்வாகத்திற்கு வழங்க தொழிற்சங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்