ஊதிய மாற்ற பிரச்சனையின் மீது, 26.06.2024 அன்று மத்திய் தொலை தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், ஊதிய மாற்ற பிரச்சனையை கால தாமதமின்றி தீர்வு காண வேண்டுமென மத்திய தொலை தொடர்பு அமைச்சரை, BSNL ஊழியர் சங்கம் தீவிரமான வேண்டுகோளை வைத்துள்ளது.
ஊதிய தேக்க நிலை காரணமாக, ஆயிரக்கணக்கான ஊழியர்கள், எவ்வாறு தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என BSNL ஊழியர் சங்கம் விவரித்துள்ளது. DoTயிலிருந்து DEPUTATIONல் வந்துள்ள உயர் மேலாளர்கள், ஊதிய மாற்றம் மற்றும் அலவன்ஸ்கள் மாற்றம் ஆகியவற்றை அனுபவித்துக் கொண்டுள்ள போது, கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள், ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காணப்படாமல் சிரமப்படுகிறார்கள் என்பதை சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் ஊதிய மாற்ற உடன்பாட்டை கையெழுத்திட வேண்டும் என 2018ஆம் ஆண்டிலேயே, CMD BSNLக்கு DoT வழிகாட்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய BSNL ஊழியர் சங்கம், ஆனால் நிர்வாகத்தின் எதிர்மறை நிலைபாட்டின் காரணமாக, அது நடைபெறவில்லை என்பதையும் அதில் தெரிவித்துள்ளது.