Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, May 8, 2024

ஊழியர்களுக்கும் நீட்டிப்பு செய்க!

மொபைல் தொலைபேசி வழங்கும் வசதியை ஊழியர்களுக்கும் நீட்டிப்பு செய்க - ஊழியர்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்தாதீர்! என CMD BSNLக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் 


நிறுவனத்தின் ”கடுமையான நிதி நெருக்கடி”யை காரணம் காட்டி, ஊழியர்களின் ஒவ்வொரு கோரிக்கையயும் BSNL நிர்வாகம் மறுத்து வருகிறது.  அதே சமயம், அதிகாரிகளின் கோரிக்கைகளை, பெரிய மனதோடு தாராளமாக ஏற்றுக் கொள்ள நிர்வாகம் தயங்குவதில்லை.  அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள, நிர்வாகத்திற்கு நிறுவனத்தின் “கடுமையான நிதி நெருக்கடி” தடை செய்வதில்லை.  உண்மையில், ஊழியர்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு தான் நிர்வாகம் நடத்துகிறது.  

07.05.2024 அன்று, மொபைல் கருவிகளை அதிகாரிகள் வாங்குவதற்கான தொகையை, நிர்வாகம் கணிசமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ஊழியர்களும், குறிப்பாக JEக்கள், JTOக்கள் செய்யும் அதே பணிகளை செய்து வருகின்றனர்.  மேலும் வியாபார நடவடிக்கைகளுக்காக, Sr.TOAக்கள், TTக்கள் மற்றும் ATTக்கள், மொபைல் தொலைபேசியினை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.  வலுவாக செய்திகளை பரிமாறிக் கொள்ள, மேலதிகாரிகள் நடத்தும் WHATSAPP குழுக்களிலும் அவர்கள், அனைத்து ஊழியர்களையும் இணைத்துள்ளனர்.  

ஆனால் நிர்வாகம், மொபைல் தொலைபேசி வழங்கும் வசதியை ஊழியர்களுக்கு நீட்டிக்கவில்லை. எனவே மொபைல் தொலைபேசிகள் வாங்குவதற்கான பணத்தை வழங்கும் வசதியை ஊழியர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என, 08.05.2024 அன்று BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியுள்ளது.

தோழர் ஜான் வர்கீஸ் பொதுச்செயலாளர்(பொறுப்பு)

தகவல்: BSNLEU  மத்திய, மாநில சங்கங்கள் 

BSNLEU கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

நிர்வாகத்தின் 07.05.2024 தேதியிட்ட உத்தரவு காண இங்கே சொடுக்கவும்