BSNLEU ஆத்தூர் கிளைச் செயலர் தோழர் A. அருள்மணி, TT, நேற்று, 30.04.2024 இலாக்கா பணி நிறைவு செய்தார். தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, நேற்று ஆத்தூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாநில உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், AIBDPA மாவட்ட செயலர் தோழர் S. தமிழ்மணி உள்ளிட்ட, BSNLEU, AIBDPA மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் திரளாக கலந்து கொண்டனர். TNTCWU மாவட்டத் தலைவர் தோழர் K. ராஜன் உள்ளிட்ட, ஆத்தூர் பகுதி ஒப்பந்த ஊழியர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
பணி நிறைவு பாராட்டு விழாவில், சேலம் மாவட்ட BSNLEU சங்கத்திற்கு, ₹5000, மாநில சங்கத்திற்கு, ₹1000, கிளைச் சங்கத்திற்கு ₹1000 என மொத்தம் ₹7000 நண்கொடை வழங்கினார், தோழர் அருள்மணி.
AIBDPA சங்கத்தில் ஆயுள் சந்தா செலுத்தி, உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். நன்கொடை ₹500, AIBDPA சங்கத்திற்கு வழங்கினார்.
சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த ஆத்தூர் கிளைக்கு தோழமை வாழ்த்துக்கள். தோழர் அருள்மணி அவர்களின் பணி நிறைவு காலம் சிறப்பாக அமைய தோழமையோடு வாழ்த்துகிறோம். நன்கொடை வழங்கியதற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.