ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவை, EPF மற்றும் ESI அமுலாக்கம் உட்பட அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி மாநிலம் முழுவதும், மாவட்ட நிர்வாகங்களுக்கு மகஜர் கொடுத்து, மாவட்டத் தலைநகரங்களில், 09.04.2024, செவ்வாய் கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்திட, 24.03.2024 அன்று நடைபெற்ற, TNTCWU மாநில செயற்குழுவில், முடிவு செய்யப்பட்டு, போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டது.
அதன்படி, நமது சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக, 09.04.2024 அன்று சேலம் GM அலுவலகத்தில் சக்திமிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, DGM HQ அவர்களை சந்தித்து, கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது.