Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 11, 2024

ஊதிய மாற்றம் - BSNLEU கடிதம்



ஊதிய மாற்றம்- ஓய்வூதிய பங்களிப்பு தொடர்பான தகவல்களை தர வேண்டுமென, ஊதிய பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவருக்கு, BSNLEU கடிதம்


ஊதிய மாற்றக் குழுவின் அடுத்த கூட்டம் 22.03.2024 அன்று நடைபெற உள்ளது. இந்த பின்னணியில், ஓய்வூதிய பங்களிப்பு வழங்குவது தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும் என ஊதிய மாற்ற பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவருக்கு, BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

01.01.2024 தேதியில், ஊழியர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் வழங்கப்படும் ஓய்வூதிய பங்களிப்பு, 27.07.2018 அன்று இரு தரப்பாரும் ஏற்றுக் கொண்ட ஊதிய விகிதங்களின் படியும், டிசம்பர் மாதம் 2022ல் நிர்வாகம் முன் மொழிந்துள்ள ஊதிய விகிதங்களின் படியும், 0% மற்றும் 5% ஊதிய நிர்ணய பலன் ஆகியவை ஊழியர்களுக்கு வழங்கினால், எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் 3rd PRC, அதிகாரிகளுக்கு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் படி, அதிகாரிகளுக்காக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பங்களிப்பு ஆகிய விவரங்களை வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம், அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

ஊழியர் தரப்பு உறுப்பினர்களுடன் விவாதிப்பதற்கு ஏதுவாக, இந்த தகவல்களை, அடுத்த கூட்டம் நடைபெற உள்ள 22.03.2024க்கு முன் வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்