ALTTCயை, கபளீகரம் செய்யும், DoTயின் நடவடிக்கைகளை எதிர்த்து, சேலம் மாவட்ட AUAB சார்பாக, சேலம் GM அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், 11.12.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் S. ஹரிஹரன் (BSNLEU), G. சேகர் (SNEA) N. கௌசல்யன்(AIBDPA), K. ராஜன் (TNTCWU) கூட்டு தலைமை ஏற்றனர்.
தலைமையுரைக்கு பின், SNEA மாவட்ட செயலர் தோழர் K. ஸ்ரீனிவாசன், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E. கோபால், AIBDPA மாநில உதவி செயலர் தோழர் T. பழனி, TNTCWU மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் ஆகியோர் கண்டன பேருரை வழங்கினார்கள்.
ஆர்ப்பாட்ட கோஷங்களை தோழர் P. செல்வம் BSNLEU மாவட்ட உதவி தலைவர் எழுப்பினார். மற்றுமொரு மாவட்ட உதவி தலைவர் தோழர் R. முருகேசன் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள், அதிகாரிகள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளாக கலந்து கொண்டனர்.
BSNL நிறுவன நலன் சார்ந்த கோரிக்கைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு, சேலம் மாவட்ட AUAB சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்.