Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, August 23, 2023

ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளுக்காக Dy.CLC, RLC மற்றும் LEO அலுவலகங்களை நோக்கி பேரணி


நாள்: 24.08.2023 - வியாழக்கிழமை - காலை 10.30 மணி அளவில் 

இடம்: சேலம் ஜங்ஷன் - ரயில்வே  ஊழியர் குடியிருப்பு முதல் LEO அலுவலகம் வரை  

ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான, 09.07.2023, ஹைதராபாத் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், குறைந்த பட்ச ஊதியம், EPF, ESI உள்ளிட்ட சமூக பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, 24.08.2023 அன்று நாடு தழுவிய அளவில் Dy.CLC, RLC மற்றும் LEO அலுவலகங்களை நோக்கிய பேரணியினை நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய தலைமையகம் அறைகூவல் விடுத்துள்ளது.

இந்த இயக்கத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என 17.08.2023 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற  BSNLEU - TNTCWU சங்கங்களின் கூட்டு மாநில செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சேலம், தர்மபுரி BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக, 24.08.2023 அன்று, சேலம் ஜங்ஷன் ரயில்வே  ஊழியர் குடியிருப்பு பகுதியில் துவங்கி, LEO அலுவலகம் வரை பேரணியாக சென்று, ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளை மகஜராக, LEO அவர்களிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட BSNLEU - TNTCWU சங்க தோழர்கள், 24.08.2023 அன்று காலை 10 மணி அளவில், சேலம் ஜங்ஷன் ரயில்வே  ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ள LEO அலுவலக வாயிலில் திரள வேண்டும். தர்மபுரி தோழர்களும் அங்கு வந்து விடுவார்கள். பின்னர் நாம் கூட்டாக பேரணி சென்று கூட்டு மகஜர் வழங்கவுள்ளோம்.

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU