10.03.2023 - வெள்ளிக்கிழமை, மதியம் 3 மணி அளவில்,
C-DoT MBM கூட்ட அரங்கம், மெயின் தொலைபேசி நிலையம், சேலம்.
05.04.2023 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தொழிலாளி - விவசாயி பேரணியை ஒட்டி, 10.03.2023 அன்று மாவட்டம் தழுவிய கருத்தரங்கங்களை நடத்த வேண்டும் என BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. இந்த கருத்தரங்கில் பணியில் உள்ள ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்பார்கள்.
இந்தக் கருத்தரங்கில், "தொழிலாளி - விவசாயி பேரணி"யின் 14 அம்ச கோரிக்கைகள் விளக்கப்பட்டு, அடுத்து நடைபெறவுள்ள ஊழியர் சந்திப்பு இயக்கம், தெருமுனை பிரச்சார கூட்டம் மற்றும் டில்லியில் நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளவுள்ள தோழர்களின் பட்டியல் இறுதி படுத்தப்படும்.
எனவே, 10.03.2023 - வெள்ளிக்கிழமை, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெறவுள்ள, மாவட்ட அளவிலான இந்த கருத்தரங்கில், BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்கங்கள் சார்பாக, பெருமளவில் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள, மூன்று சங்க மாநில நிர்வாகிகள், தோழர்கள் S. ஹரிஹரன், (BSNLEU), T. K. பிரசன்னன், (AIBDPA), C. பாஸ்கர், (TNTCWU) சிறப்புறையாற்றவுள்ளனர்.